
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்கிற்கும் இடையே தொலைபேசி வழியாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா, அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நேரத்தில் இந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர் வரும் 21 ஆம் திகதி இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment