
பதுளை - ஹல்துமுல்லை நகரத்துக்கு அருகில் பயணித்த கார் மீது கற்பாறைகள் சில உருண்டு விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்போது காரில் நான்கு இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில் அவர்களுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என ஹல்துமுல்லை பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பாறைகள் விழுந்ததில் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த கார் ஒன்றேின் மீதே இவ்வாறு கற்பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.
Post a Comment