உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர காரணமாக இருந்தவர்களை கைது செய்கின்றனர்! - நாமல் கடும் விசனம்!…!



தேர்தல் பிரச்சாரங்களின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர காரணமாக இருந்தவர்களை கைது செய்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கைது செய்துள்ளதாக அரசாங்கத்தினர் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். தேர்தல் மேடைகளில் ராஜபக்ச குடும்பத்தினரை சாடாது ஜனாதிபதி உலகளாவிய வர்த்தக சரிவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அநுராதபுரம் நொச்சியாகம பகுதியில் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன அநுராதபுர மாவட்டத்தில உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட உள்ளது. விசேடமாக இன்று 35 வயதுக்கும் குறைந்த எமது இளம் வேட்பாளர்களை சந்தித்து கலந்துறையாடியிருந்தோம். அரசாங்கம் எவ்வாறான விடயங்களை கூறினாலும் இறுதி தீர்மானம் மக்களுடையது. தமக்கு வாக்களிக்காது விடின் மாகாண சபைகளுக்கு பணம் வழங்கமாட்டோம் என அரசாங்கம் பொதுமக்களிடம் அச்சுறுத்தல் விடுக்கிறது. அதேநேரத்தில் இந்தியாவுடன் இந்நாட்டு பாதுகாப்புத் தொடர்பில் பொதுமக்கள், ஊடகங்கள் மாத்திரமல்ல பாராளுமன்றத்துக்கு கூட அறிவிக்காமல் இரகசிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் உள்ள 159 உறுப்பினர்களுக்கும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து எவ்விடயமும் முழுமையாக தெரியாது. தேர்தல் பிரச்சாரங்களின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர காரணமாக இருந்தவர்களை கைது செய்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கைது செய்துள்ளதாக அரசாங்கத்தினர் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். தேர்தல் மேடைகளில் ராஜபக்ச குடும்பத்தினரை சாடாது ஜனாதிபதி உலகளாவிய வர்த்தக சரிவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்புக்கு பின்னர் உலக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், உலக அரசியலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் நிலைமையை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் வர்த்தகம் தொடர்பில் உலக நாடுகள் புதிய இணக்கப்பாடுகளை எட்ட தயாராக உள்ளன. சீனா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பிற நாட்டு தலைவர்களை சந்தித்து வர்த்தகம் தொடர்பில் கலந்துறையாடுகின்றனர். எனினும் இந்நாட்டு ஜனாதிபதி நாடு முழுவதும் உள்ள தேர்தல் மேடைகளில் எம்மைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

எவ்வாறாயினும் இதற்கு முன்னர் 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்து-லங்கா ஒப்பந்தம் முழுமையான பலனைத் தரவில்லை. இந்தியாவுடன் இருந்த பகையை மறந்து அபிவிருத்தி சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதால் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் வெளிப்படைத்தன்மை இன்றி பொதுமக்களுக்கு அறிவிக்காது மேற்கொள்ளப்படும் இரகசிய ஒப்பந்தங்களை ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது புலனாய்வுப் பிரிவிலிருந்த அதிகாரிகள் இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், பதில் பொலிஸ்மா அதிபராகவும் கடமையாற்றுகின்றனர்.

ஆகையால் இம்முறை நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். தாகுல் இடம்பெறும் என்பதை அறிந்திருந்தோம் எனினும் உயிர்த் ஞாயிறு அன்று இடம்பெறும் என்பதை நாம் அறிந்திருக்க வில்லை என, தமது கடமைகளை புறக்கனித்த அதிகாரிகளுக்கே தற்போது பொதுமக்களை பாதுகாக்கும் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

Post a Comment

Previous Post Next Post