
ஏமனில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதலில் இதுவரை 171 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் இருந்து செயற்படும் ஹவுத்தி அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுத்தி அமைப்பு தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், ஏமனில் ஹவுத்தி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment