ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டி: இலங்கை 9 ஆவது இடத்தில்...!



சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆசிய தடகள சம்மேளனத்தின் ஏற்பாட்டில், கதீஃப் நகரில் நான்கு நாட்கள் நடைபெற்ற இச் சம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நேற்றுடன் (18) நிறைவடைந்தன.

இதில் இலங்கை ஒரு தங்கப் பதக்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்கள், நான்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

இதன்படி, போட்டியில் பங்கேற்ற நாடுகளில், குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கமாவது வென்ற 19 நாடுகளில் இலங்கை பதக்கப் பட்டியலில் 9ஆவது இடத்தைப் பெற்றது.

இப் போட்டியில் இலங்கை வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை, ஆசிய 18 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கை பெற்ற மிக உயர்ந்த பதக்க எண்ணிக்கையாகும்.

கடந்த 2023ஆம் ஆண்டு இப்போட்டித் தொடர் நடைபெற்றபோது, இலங்கை இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 4 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது.

இதேவேளை குறித்த போட்டியில் 19 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ள நிலையில், ஜப்பான் மூன்று தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post