பிரபல பின்னணிப் பாடகி கல்பனா உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை என அவரின் மகள் தயா பிரசாத் பிரபாகர் கருத்து வெளியிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தின் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவர் நேற்றைய தினம் மயக்க நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து அவரது மகள் தயா பிரசாத் பிரபாகர் கருத்து வெளியிட்டுள்ளார். என் அம்மா இப்போது நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய தாய் தந்தை இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். மன அழுத்தம் காரணமாகவே அம்மா, வைத்தியரின் பரிந்துரையின் பேரில் தினமும் தூக்க மாத்திரைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் அவர் வைத்தியரின் பரிந்துரையையும் விட அளவுக்கதிகமாக மாத்திரையை எடுத்துக் கொண்டதால் தான் மயக்கமடைந்துள்ளார். அம்மா உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி எல்லாம் செய்யவில்லை. என் அம்மாவும் அப்பாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
குடும்பத்தில் எல்லோரும் மிகவும் நலமாக இருக்கிறார்கள். தயவுசெய்து எங்கள் விடயங்களை தவறான முறையில் கையாள வேண்டாம் என கல்பனாவின் மகள் கேட்டுக் கொண்டுள்ளார்.
Post a Comment