CEBக்கு எதிர்க்கட்சியினர் விஜயம்...!

 


இலங்கை மின்சார சபையின் (CEB) பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு,  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று விஜயம் செய்யவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

 பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய அரச நிறுவனங்களுக்குச் செல்லும் 'கவேஷன கரிகா'வை மேற்கொள்வதற்கு சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்றக் குழு எடுத்த தீர்மானத்திற்கு இணங்க இது அமைந்துள்ளது.

 இலங்கை மின்சார சபைக்கான விஜயமானது நாட்டின் மின் உற்பத்தி தொடர்பான தற்போதைய நிலைமையைக் கண்டறிந்து தீர்மானிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post