காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி நிறுவனம் விலகல்...!

 


இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டாலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களைக் காரணம் காட்டி, இன்றுவரை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளது, மேலும் இது ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும், இலங்கையில் எதிர்கால திட்டங்களுக்கு தங்கள் நிறுவனம் திறந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

இது தொடர்பாக முதலீட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post