கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்...!

 


கனடாவின் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக  சரிவடைந்துள்ள நிலையில்  தற்போது வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கடந்த ஜனவரி மாதம்  வேலையின்மை விகிதம் 6.6 சதவிகிதமாகப் பதிவாகியிருந்த நிலையில் அதற்கு முந்தைய மாதத்தில் 6.7 சதவிகிதம் என பதிவாகியிருந்தது. அது மட்டுமின்றி  ஜனவரி மாதத்தில் மாத்திரம்  76,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் இந்த எண்ணிக்கை 91,000 என இருந்தாலும், தற்போதைய நெருக்கடியான சூழலில் 76,000 வேலைவாய்ப்புகள் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றே கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு   15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு 1.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பிரிவில் வேலையின்மை விகிதம் 14.2 சதவிகிதத்தில் இலிருந்து 13.6 சதவிகிதமாகக் குறைந்தது. நிரந்தர ஊழியர்களுக்கான சராசரி மணிநேர ஊதிய வளர்ச்சி 3.7 சதவிகிதமாக இருந்தது. இது டிசம்பரில் திருத்தப்பட்ட 3.8 சதவிகிதத்தில் இருந்து சற்று குறைவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Post a Comment

Previous Post Next Post