உலக அரச உச்சி மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை...!


 

டுபாயில் நடைபெறும் உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று உரையாற்றவுள்ளார்.

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி, உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பல அரச தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல் என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டின் போது, ஜனாதிபதி பல மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்றுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post