இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களுக்காக விசேட மொழிபெயர்ப்பாளர் குழுவை உருவாக்க தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரச நிறுவனங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் முனீர் முலாபர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் அரச சேவையில் பல்வேறு மொழித்திறன் கொண்ட தொழில் வல்லுநர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
Post a Comment