2025ஜனவரியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் அளவு 573 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த 2024 ஜனவரி மாத்தில் பதிவு செய்யப்பட்ட 487.6 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 17.5% சதவீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில் மொத்தமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து 6.57 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது 2023 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 5.96 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும் போது 10.1% சதவீத அதிகமாகும்.
இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணமானது, நாட்டின் ஏற்றுமதி வருவாயைத் தவிர, இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய மூலமாகும்.
Post a Comment