இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 6 வாரகால போர் நிறுத்தம் ஏற்பட்டு, ஹமாஸ் வசம் உள்ள 33 இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் பலஸ்தீன எல்லையின் மேற்கு கரைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.
பலஸ்தீன துல்காரெம் மற்றும் நுர் ஷாம்ஸ் பகுதிகளில் உள்ள முகாம்களை இஸ்ரேல் இராணுவம் தீயிட்டு எரித்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் மூன்று வீடுகளையும் முற்றிலுமாக அழித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் தொடர்ந்து 17 நாட்களாக துல்காரெம் பகுதிக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் துல்காரெம் பகுதியிலுள்ள மசூதி அருகே இருந்த வீட்டில் இரு பெண்களை இஸ்ரேல் இராணுவம் சிறைபிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment