
இன்று (12) மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரும், களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின் நிலையத்தின் தலைமை பொறியியலாளருமான தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
இருப்பினும், குறித்த மின் உற்பத்தி நிலையம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை மின்சார விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
Post a Comment