இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தல், அபிவிருத்தி செய்தல், நிர்வகித்தல் தொடர்பில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் புதிய தேசிய விளையாட்டு சபை நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக பிரியந்த ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ரக்பி மற்றும் கால்பந்தாட்ட விளையாட்டு வீரரான அவர், இலங்கை ரக்பி அணியின் தலைவராகவும், இலங்கை ஆசிய சங்கத்தின் தலைவராகவும் செயற்ப்பட்டுள்ளார்.
புதிய தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினர்களாக சமந்தா நாணயக்கார
ருக்மன் வேகடகல
சிதத் வெத்தமுனி
ச்சானக ஜயமஹ –
ரொஹான் அபேகோன்
நிரோஷன் விஜேகோன் முராத் இஸ்மயில்
ரொஷான் மஹானாம
சி.ரத்னமுதலி
ஸ்ரீரியானி குலவங்ச
மலித் கே பெர்னான்டோ
ஷானிக பெர்னான்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டுத் துறை சார்பில் விசேட கல்வி பட்டங்களையும், தகுதிகளையும் கொண்டவர்கள் இந்த சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Post a Comment