
பாகிஸ்தானை ஆள்வது இராணுவத் தளபதி ஆசிம் முனீர் என்பது குழந்தைக்கு கூட தெரியும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், அடக்குமுறை மற்றும் பாசிசத்தின் பிடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ளது என்று இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது 'எக்ஸ்' தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"பாகிஸ்தான் இராணுவத்தின் நம்பகத்தன்மை அழிக்கப்படுகிறது என்பதை இராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளரிடம் சொல்ல விரும்புகிறேன். அரசியலில் தலையிட மாட்டோம் என இராணுவம் கூறுகிறது. ஆனால் பாகிஸ்தானை ஆள்வது இராணுவத் தளபதி ஆசிம் முனீர் என்பது குழந்தைக்கு கூட தெரியும்.
பாகிஸ்தான் இராணுவம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். தெஹ்ரீக்-ஈ-இன்சாப் கட்சியின் தலைவர்களைக் கைது செய்வதற்கும், தேர்தல் மோசடிகளை மறைப்பதற்கும் மட்டுமே அரசு அமைப்பு வேலை செய்கிறது. மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாகிவிட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment