இந்தியாவில் தடை செய்யப்பட்ட 36 சீன செயலிகள் மீண்டும் பாவனைக்கு...!

 


கடந்தகாலங்களில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீனாவினுடைய 36 செயலிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த 2020இல் இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீனநாட்டினுடைய 267 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. டிக்டொக் உட்பட பல்வேறு செயலிகள் இதில் அடங்கும். அதுமட்டுமன்றி சீனாவுடன் தொடர்பு கொண்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் செயலிகளுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது.


இந்தச் சூழலில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட சீன செயலிகளில் 36 செயலிகள் இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தடை செய்யப்பட்ட சீன செயலிகள் தடை நீக்கப்பட்டு புதிய பெயரிலும், சிறிய மாற்றத்துடனும் மீண்டும் பாவனைக்கு வருவதாக தொழிநுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


 இந்தியாவில் தடை செய்யப்பட்ட குறித்த செயலிகளினுடைய சின்னம் (logo) , தரஅடையாளம்(Brand) , உரிமை போன்ற விடயங்களை சீன செயலிகளின் வடிவமைப்பாளர்கள் மாற்றி அதன் க்ளோன் வெர்ஷனை ( Clone version) அறிமுகம் செய்துள்ளனர்.


 இதேவேளை 2020இல் தடை செய்யப்பட்ட பப்ஜி செயலிக்கு மாற்றாக அதன் இந்திய பதிப்பாக பி.ஜி.எம்.ஐ வெளிவந்தது. அந்த செயலியும் இடையில் தடையை எதிர்கொண்டது. இருப்பினும் அந்த தடை நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post