வெளிநாடு செல்லவுள்ள 340,000 பேர்...!

 

இந்த ஆண்டு 340,000 இலங்கையர்களின் வேலைவாய்ப்புக்கென வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலையவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்புக்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்பும் முகவர் நிறுவன பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டத்தில் இணைந்துகொண்டே போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பின் ஊடாக சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 314000 இலங்கையர்கள் தொழில்களுக்கென வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். இதனூடாக சுமார் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post