இரும்பு ,அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிப்பு : ட்ரம்ப்

 

கனடா மற்றும் மெக்சிக்கோ உட்பட அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா 25 சதவீதம் வரை வரிகளை விதிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என ட்ரம்ப் இன்று தெரிவித்தார்..

இதேபோல் மற்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தால், அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவும் இறக்குமதி வரிகளை விதிப்பது (பரஸ்பர வரிகள்) தொடர்பாக அறிவிப்பேன் என்று ட்ரம்ப் மீண்டும் கூறி உள்ளார். அநேகமாக பரஸ்பர வரிகளை செவ்வாய் அல்லது புதன்கிழமை அறிவிக்கலாம் என கூறி உள்ளார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் முக்கிய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, இரும்பு ஏற்றுமதி செய்யும் தென் கொரியஅரசு இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி உள்ளது. இதில் பங்கேற்கும்படி வெளியுறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தக நிறுவன அதிகாரிகளுக்கு தற்காலிக ஜனாதிபதி சோய் சாங்-மோக் அழைப்பு விடுத்துள்ளார். இரும்பு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகள் நாட்டின் தொழில்களை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தென் கொரியாவில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை அமெரிக்காவிற்கு சுமார் 4.8 பில்லியன் டொலர் மதிப்புள்ள இரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது அந்த காலகட்டத்தில் அந்த நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 14 சதவீதமாகும் என்பதும் குறிப்பி

டத்தக்கது.


 


Post a Comment

Previous Post Next Post