
இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ஆம் கட்டப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.
அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடா்ந்து கடந்த மாதம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் முதல்கட்டம் தொடங்கி 16 நாட்களுக்குப் பிறகு, ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய 42 நாட்கள் போர்நிறுத்தத்தில் பாதி நாட்கள் கடந்துவிட்டபோதிலும், ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான இஸ்ரேல் குழுவை கட்டாருக்கு அனுப்புவதற்கு இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு சனிக்கிழமைதான்(08) ஒப்புதல் அளித்தார் . ஆனால் அந்தக் குழுவிலும் கீழ்நிலை அதிகாரிகள்தான் இடம்பெற்றுள்ளனா்.
ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து இந்த வாரத்தில் முக்கிய கபினட் அமைச்சா்கள் கூட்டத்தை பிரதமா் நெதன்யாகு கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்டம் நடைபெறும் வரை ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment