அமெரிக்காவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் ஈரான் நடந்தது என்ன?

  தெஹ்ரான் மற்றும் பிராந்தியத்தில், தெஹ்ரானை ஆதரிக்கும் குழுக்களை குறிவைத்து இஸ்ரேலும் அதன் நட்பு நாடான அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei ) எச்சரித்துள்ளார்.

ஈரானிய (Iran) தேசத்துக்கு எதிராக அவர்கள் மேற்கொள்கின்ற செயற்பாடுகளுக்கு நிச்சயமாக பல்லை உடைக்கும் பதிலைப் பெறுவார்கள் என்று அவர் குறிப்பட்டுள்ளார்

கடந்த ஆண்டு அக்டோபரில் காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பித்ததில் இருந்து பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில் 2024 அக்டோபர் 26 அன்று, இஸ்ரேல் தெஹ்ரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஈரான் | Iran Warns Israel And America

முன்னதாக, ஈரான் ஆதரவு போராளி தலைவர்கள் மற்றும் ஒரு புரட்சிகர தளபதி ஆகியோர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்டோபர் 1ஆம் திகதியன்று ஈரான் நடத்திய தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாகவே இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியது.

இதன்போது ஈரானில் உள்ள இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களால், சில ரேடார் அமைப்புகளுக்கு வரையறுக்கப்பட்ட சேதம் ஏற்பட்டதாக கூறிய ஈரானிய ஊடகங்கள், குறைந்தது நான்கு படையினரும், ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தன.  


Post a Comment

Previous Post Next Post