தற்போதைய அரசியல் சிதைப்பிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு சர்வஜன அதிகாரத்துடன் இணைந்து கொள்ளுமாறு அதன் தலைவர் திலித் ஜயவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஹர பிரதேசத்தில் இன்று (03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“3% வாக்குகளைபெற்ற என்.பி.பி. இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளது
அதற்கப்புறம் தலைவர் ஒருவரை கண்டறிய முடியாக கட்சியாக சிலிண்டர் கட்சி உள்ளது.
மறுபுறம் வெற்றி பெறும் சஜித், இன்று தோல்வியடைந்த சஜித். அடுத்தது மொட்டு கட்சியின் வாலே எஞ்சியுள்ளது.
மறுபுறம் மைக். உரிமையாளரின் பெயரைச் சொல்ல முடியாது. அந்தக் கட்சிக்கு நிதி கிடைக்கும் விதம் தொடர்பிலும் அறிய முடியாத நிலை.
எனவே அரசியல் சிதைப்பிலிருந்து விடுபட சர்வஜன அதிகாரத்துடன் சேருங்கள். துணிச்சலான எதிர்கட்சியாக எம்மை தேர்ந்தெடுங்கள் என்றார்.
Post a Comment