பதுளை பஸ் விபத்தில் மூன்று பேர் பலி; 35 பேர் காயம்

 

பதுளை - துன்ஹிந்த வீதியில் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் பல்கழைக்கழக மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ்ஸே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது, குறித்த பஸ்ஸில் சுமார் 41 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஆறு பேர்  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

Post a Comment

Previous Post Next Post