ஏஆர் ரஹ்மானிடமிருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதோடு பிரிவுக்கு என்ன காரணம்? என்பது பற்றி சாயிரா பானு - ஏஆர் ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் மூலம் கூட்டு அறிக்கையாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
சாயிரா பானு, அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் சார்பில் வந்தனா மற்றும் அவரது கணவர் சார்பில் இந்தக் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் சாராம்சம் இவ்வாறு தெரிவிக்கிறது.
திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிரியும் கடினமான இந்த முடிவை எடுத்துள்ளோம். உணர்ச்சிகரமான அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியதை இருவரும் அறிகிறோம்
இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மான் - சாயிரா பானு ஆகியோரின் திருமணம் எப்படி நடந்தது? திருமணத்துக்கு ஏஆர் ரஹ்மான் போட்ட 3 கண்டிஷன் மற்றும் சாயிரா பானு கேட்ட 2 கேள்வி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது
பிரபல இசையமைப்பாளரும் ‛ஆஸ்கர்' விருது வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். இவரது மனைவிக்கு பெயர் சாயிரா பானு. இவர்கள் 2 பேரும் கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் செய்தனர்.
இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார்.
சாயிரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாயிரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.
உணர்ச்சிப்பூர்வமான அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் இருவருக்கும் இடையே யாரும் பாலமாக வந்து ஒன்றிணைக்க முடியாது. வலி மற்றும் வேதனையுடன் இந்த முடிவை சாயிரா பானு எடுத்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானுக்கும், அவரது மனைவி சாயிரா பானுவுக்கும் எப்படி திருமணம் நடந்தது? என்பது பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம். ஏஆர் ரஹ்மான் - சாயிரா பானு ஆகியோரின் திருமணம் கடந்த 1995ம் ஆண்டு சென்னையில் நடந்தது.
இந்த திருமணத்துக்கு காரணமாக இருந்தவர் ஏஆர் ரஹ்மானின் தாய் கரீமா பேகம் தான். அதாவது ஏஆர் ரஹ்மான் தமிழ் திரையுலகில் 1992ம் ஆண்டில் தான் அறிமுகம் ஆகி இருந்தார். அவர் ரோஜா திரைப்படத்துக்கு இசையமைத்தார். இந்த திரைப்படம் ஹிட் அடித்தது. அதோடு ரஹ்மானின் இசை பெருமையாக பேசப்பட்டது.
அதன்பிறகு ஏஆர் ரஹ்மான் பிஸியானானர். அதிகமான படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்த காலத்தில் தாய் கரீமா பேகம், ஏஆர் ரஹ்மானுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அப்போது ஏஆர் ரஹ்மான் தான் பிஸியாக இருக்கிறேன். ஏதாவது நீங்களே பெண்ணை பாருங்கள். நான் அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளதோடு, 3 முக்கிய கண்டிஷன்களை மட்டும் தெரிவித்துள்ளார்.
அதில் முதல் கண்டிஷன் தனக்கு மனைவியாக வரும் பெண் நன்றாக படித்திருக்க வேண்டும். 2வது கண்டிஷன் அந்த பெண் நன்கு அழகாக இருக்க வேண்டும். 3வது கண்டிஷனாக அந்த பெண் பணிவாகவும், தன்மீது அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த கண்டிஷன்களை மனதில் வைத்து தான் ஏஆர் ரஹ்மானின் தாய் கரீமா பேகம் பெண் தேட தொடங்கினார்.
அப்போது தான் கரீமா பேகம், சாயிரா பானுவை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். இவர்களின் திருமணம் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சென்னையில் நடந்தது.இந்த திருமணம் நடந்தபோது ஏஆர் ரஹ்மானின் வயது 27. சாயிரா பானுவின் வயது 21 ஆகும். திருமணத்துக்கு முன்பு சாயிரா பானு மொத்தம் 2 கேள்விகளை ஏஆர் ரஹ்மானிடம் கேட்டு இருந்தார். அதாவது ‛‛திருமணத்துக்கு பிறகு ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ளலாமா? என்று ஒரு கேள்வியையும், கார் தொடர்ந்து ஓட்டி கொள்ளலாமா? என்றும் அவர் கேட்டாராம். இதற்கு ஏஆர் ரஹ்மான் ஓகே சொன்ன பிறகே இருவரின் திருமணம் நடந்ததாக சாயிரா பானு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
Post a Comment