இதுவரை செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வசூலிக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரி செலுத்தாதவர்கள் இருந்தால், அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதுடன், சொத்துகளை பறிமுதல் செய்யவும் அதிகாரம் உள்ளது என உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் என். எம். என். எஸ். பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வரி வசூலிக்க வரும் அதிகாரிகளின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், நிலுவைத் தொகையை காசோலையாகவோ, பணமாகவோ வழங்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“இன்று முதல், எங்கள் அதிகாரிகள் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க வருவார்கள். அந்த அதிகாரிகள் யார் என்பதைக் கண்டறியவும். அவர்கள் எங்கள் துறையின் அடையாள அட்டையை அணிய வேண்டும். அவர்கள் ஒருபோதும் காசோலைகள் அல்லது பணம் அல்லது எதையும் ஏற்க மாட்டார்கள்.
இந்த ஆண்டு இறுதிக்குள் வசூலிக்க வேண்டிய
வரிகள் நிலுவையில் இருந்தால், அவை அனைத்தையும் வசூலிக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை கண்டிப்பாகப் பின்பற்றும் போது வங்கிக் கணக்குகளைத் தடைசெய்யவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் எங்களுக்கு அதிகாரம் உள்ளது.” என தெரிவித்தார்.
Post a Comment