SCO மாநாடு – பாகிஸ்தானில் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு...!


ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாட்டுக்காக சீனப் பிரதமர் லி கியாங் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

11 ஆண்டுகளின் பின்னர் சீனப் பிரதமர் ஒருவர் பாகிஸ்தானுக்குச் செல்வது இதுவே முதல் முறை என பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் லியை விமான நிலையத்தில் வரவேற்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு நாளையும் (15) நாளை மறுதினமும் (16) நடைபெறவிருக்கின்றது.

இந்நிலையில் பாகிஸ்தானின் தலைநகருக்கு மூன்று நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCO என்பது அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு நிரந்தர சர்வதேச அமைப்பாகும். இது ஒரு யுரேசியாவின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கூட்டிணைவாகும். இது 2001 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு ஷாங்காய் 5 என்ற அமைப்பாக இது செயல்பட்டது.

SCO-ன் முதன்மையான முடிவெடுக்கும் அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்களைக் கொண்ட குழுவாகும். SCO-ல் பார்வையாளர் நாடுகளாக ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் உள்ளன.



ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கிா்கிஸ்தான், கஜகஸ்தான் , தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒன்பதாவது உறுப்பினராக கடந்த ஆண்டு ஜூலையில் தான் ஈரான் சோ்ந்தது. இந்த அமைப்பு செல்வாக்கு மிக்க பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post