HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட 4 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி…!

    காட்சிப்படம் 

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு மாணவிகள் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாதுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 11 முதல் 12 வயதுக்குட்பட்ட நான்கு மாணவிகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு வாந்திபேதி மற்றும் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post