தேர்தலில் திசைகாட்டி மற்றும் எரிவாயு சிலிண்டர் சின்னங்களில் போட்டியிடுவது தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக மேற்படி தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சுமார் 10 நிமிடங்கள் மிகக் குறுகிய கலந்துரையாடலை மேற்கொண்டேன். ஆனால் ஜனாதிபதி தேர்தலின் போது அவருடன் இல்லாதவர்களுக்கு, வேட்புமனு வழங்குவதற்கு அவருக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்தார். அதே நேரம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் , முன்னாள் அமைச்சர்களுடனும் கலந்துரையாடினேன்.
இருப்பினும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ,பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்” என கூறியுள்ளார்.
Post a Comment