இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சியா..?


நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (29) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 8 சதம், விற்பனை பெறுமதி 298 ரூபாய் 16 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபாய் 66 சதம் விற்பனை பெறுமதி 388 ரூபா 25 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 20 சதம், விற்பனை பெறுமதி 324 ரூபாய் 9 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 53 சதம், விற்பனை பெறுமதி 347 ரூபாய் 51 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபா 77 சதம். விற்பனை பெறுமதி 216 ரூபாய் 2 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188 ரூபாய் 31 சதம், விற்பனை பெறுமதி 198 ரூபாய் 8 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 67 சதம் விற்பனை பெறுமதி 227 ரூபாய் 2 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 88 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 95 சதம் என இலங்கை மத்திய வங்கி இன்றுவெளியிட்டுள்ளது.






Post a Comment

Previous Post Next Post