உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம் அதிரடி கண்டு வருகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை, கடந்த 16ம் தேதி ஒரே அடியாக சவரனுக்கு ரூ.360 ரூபாய் உயர்ந்து ரூ. 57,000ஐ தாண்டியது. தொடர்ந்து அக்.17 அன்று 160 ரூபாயும், அக்.18 ம் தேதி இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது.
தொடர்ச்சியாக கடந்த 19ம் தேதி சவரனுக்கு 320 ரூபாயும், நேற்று முன்தினம் ( அக்.21) மேலும் ரூ.160 அதிகரித்தது. தொடர்ந்து 23ம் தேதி சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,720 என்கிற புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் 24ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ. 440 சரிந்தது. இது நகைப்பிரியர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்திய நிலையில், நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.80 என சற்று ஏற்றம் கண்டது.
இந்நிலையில் இன்றைய தினம் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520 ஏற்றம் கண்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப்பிரியகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 58,880க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,360க்கும் விற்பனையாகிறது.
Post a Comment