முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்கமைய அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு, குருநாகல் காவல்துறையால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதுவரை முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குப் பிரவேசிக்காத நிலையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Post a Comment