மருதமுனை மருதூர்க்கனி பொது நூலகத்துக்கு பெயர் பலகை வழங்கும் நிகழ்வு…!


கல்முனை மாநகர சபைக்கு  உட்பட்ட மருதமுனை மருதூர்க்கனி பொது நூலகத்துக்கு நீண்ட கால தேவையாக இருந்த பெயர் பலகை வழங்கும் நிகழ்வுடன் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் 07.10.2024 திங்கட்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு நூலகர் MAC.ஹரிசா சமீம் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு அதிதியாக கல்முனை வலயக்கல்வி பிரதான
கணக்காளர் Y.ஹபீபுல்லா கலந்து சிறப்பித்தார்கள்.
"வேரும் தளிரும்"சிறுவர்களினால் கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேறின.

வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கல்விமான்கள் எழுத்தாளர்கள் என பலர் அழைக்கப்பட்டு அவர்களுடைய அனுபவங்களும் பகிரப்பட்டமை விசேட சிறப்பம்சமாக இருந்தது.

இன ஐக்கியத்தை வலுப்படுத்தும் இந் நிகழ்வில் சகோதர மதத்தை சேர்ந்த சிறுமியினால் அவர்களுடைய மத வணக்க வழிபாடு நிகழ்வு எல்லோரையும் கவர்ந்ததாக காணப்பட்டது. இந்நிகழ்வுக்கு பூரண அனுசரனை பைத்துல் ஹெல்ப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பைத்துல்
ஹெல்ப் நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.


தகவல்
Malees Ameen (BHOFR)
பைத்துல் ஹெல்ப் நிறுவனம்
ஊடகப் பிரிவு
07.10.2024

Post a Comment

Previous Post Next Post