ஜனாதிபதிக்கும் – அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கு இடையில் முக்கிய கலந்துரையாடல்…!


அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சிவில் பங்கேற்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றில் இலங்கையின் திறன்களை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் x தளத்தில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post