கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தகுதியானவர் – மருத்துவரின் அறிக்கை…!


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

கமலா ஹரிஸின் வைத்தியர் ஜோசுவா சிம்மன்ஸ் குறித்த அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது,

கமலா ஹரிஸ் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார். கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார்.

நல்ல உடல் நலத்துடன் இருப்பதுடன், உயர்ந்த பதவியை வகிக்க தேவையான மன நிலையுடன் உள்ளார். புகையிலை மற்றும் மது பயன்படுத்துவதில்லை. அவருக்கு ஒவ்வாமை பாதிப்பு உள்ளது. மூன்று ஆண்டுகளாக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு சிகிச்சையில் இருக்கிறார்.

மேலும், ஹரிஸ் கிட்டப்பார்வை கொண்டவர். இதற்காக அவர் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்து உள்ளார். அவருக்கு 3 வயதாக இருந்தபோது வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய், நுரையீரல் நோய், நரம்பியல் கோளாறுகள், புற்றுநோய் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகள் இல்லை என்று மருத்துவ அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post