எதிர்வரும் வியாழனன்று ரணிலின் விசேட உரை…!


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

ரணில் விக்கிரமசிங்க இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதில்லை எனவும் தீர்மானித்து பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி வருகின்றார்.

Post a Comment

Previous Post Next Post