குருந்துவத்தை, ஜாவத்த வீதியில் அமைந்துள்ள இத்தாலிய தூதரகத்தை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த நபர் ஒருவர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களின் வரைபடங்கள் அடங்கிய 700 பக்க புத்தகத்துடன் இன்று காலை கைது செய்யப்பட்டதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட புத்தகம் தவிர, முக்கியஸ்தர்களின் உரையாடல் குறிப்புகள் அடங்கிய புத்தகம் மற்றும் டைரி, சந்தேக நபர் அளித்த எதிர் பதில்கள், புகைப்படங்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரிடம் கைப்பற்றப்பட்டுள்ளன.
நடமாடும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழு சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குருந்துவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர் கொழும்பு, புறக்கோட்டை மெனின் சந்தையில் சகோதரர் ஒருவருடன் இணைந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும்,ஆறு மாதங்களுக்கு முன்னர் அந்த நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
54 வயதான சந்தேக நபர் கொட்டகொட யாகொடமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment