முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் - ஜனாதிபதி…!


முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தேகமவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது கவனித்துக்கொள்வது மக்களின் வேலையில்லை என தெரிவித்துள்ள அவர் சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேட சலுகைகள் சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அந்த சுற்றுநிரூபங்களில் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post