சஜித்தை பிரதமராக்கி, அநுரவுடன் இணைந்து செயற்பட தயார்…!


பெரும்பான்மையான பலத்தை ஏற்படுத்தி சஜித் பிரேமதாசவை பிரதமராக்கிய பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்க மோசடி செய்பவர்களை திருடர்களை பிடிக்க செயல்பட்டால், வெளிநாட்டில் மறைத்து வைத்துள்ள பணத்தை கொண்டுவந்தால், நிபந்தனையின்றி ஆதரவளிக்க நாம் தயார் என தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை இல்லாத நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எனவும், பெரும்பான்மை பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் எனவும் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றுபடுவது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்ளாதிருக்க கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Post a Comment

Previous Post Next Post