உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகளை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - ரணில்விக்கிரமசிங்க…!


கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை அரசியல்மயப்படுத்தவேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் ஏஎம்ஜேடிஅல்விஸ் அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனிவிரட்ணவையோ சிஜடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகரவையோ பழிவாங்கும் நோக்கில் தயாரிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின்போதே அந்த அறிக்கை எனக்கு கிடைத்தது எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்தும் விருப்பம் இல்லாததால் நான் அறிக்கையை பகிரங்கப்படுத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post