20அடிக்கும் மேலான பள்ளத்தில் கார் விழுந்து விபத்து…!


கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகமாக பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இன்று 29)ம் திகதி அதிகாலை 2 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஷானன் வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளையில் இருந்து ஹட்டன் செல்லும் பிரதான வீதியில் காலை வேளையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதாகவும், காரின் சாரதி வீதியை சரியாக அவதானிக்காமையால் கார் வீதியை விட்டு விலகிச் சென்றமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தின் போது காரில் நால்வர் பயணித்துள்ளதுடன், விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும், கார் பலத்த சேதமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். .

விபத்து தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post