15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை…!


2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,540,161 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் ஒக்டோபர் மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 55 353 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதில் 29.2 வீதமானவர்கள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

அத்துடன் சீனாவிலிருந்து 3963 சுற்றுலாப் பயணிகளும் ஜேர்மனியிலிருந்து 3469 சுற்றுலாப் பயணிகளும் குறித்த காலப்பகுதியில் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post