கல்வித் திட்டத்திற்கு அமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் தோற்றுவது வழமையானது. அதிலும் மாணவர்கள் 9A சித்தி பெறுவது என்பது சாதனையாக கருதப்படுகிறது.
இந்நிலையில் களுத்துறையை வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மது ஷாகிர் பாத்திமா நுஹா எனும் மாணவி அண்மையில் வெளியான 2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு பத்தாம் தரத்திலேயே தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றி 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். பாதிமா நுஹா ஆங்கில இலக்கியப் பாடத்திலும் A சித்தி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாத்திமா நுஹா தனது ஆரம்பக் கல்வியை காலி/ பலபிடிய, வெலிதர முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை களு/ களுத்துறை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்திலும் கற்றார். மேலும் பாதிமா நுஹா விஞ்ஞானப் பிரிவில் தனது உயர்கல்வியை தொடர்கிறார்.
பாத்திமா நுஹா, மக்கொனை ஷாகிர் ஹுஸைன் (ஆசிரியர்), பலபிடிய நஜ்முன்நிஸா நிஜாம் ஆகியோரின் புதல்வியாவார்.
பாத்திமா நுஹா என்ற மாணவிக்கு ஸ்டார் வானொலி சார்பாக எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றோம்.
Post a Comment