ஒக்டோபர் மதத்திற்குள் புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
50,000,00 புதிய கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் முதல் தொகுதியாக 50,000 கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவை கிடைத்தவுடன் தற்போது கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிட்டுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இலத்திரணியல் கடவுச்சீட்டு விநியோகம் தாமமாகியுள்ளது. அதேபோன்று இலத்திரணியல் கடவுச்சீட்டு அல்லாத சாதாரண கடவுச்சீட்டு போதுமான தொகை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கையிருப்பில் இல்லாமல் போனதாலே இந்த பிரச்சினை ஏற்பட காரணமாம் எனவும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரிங்களுக்காக எமது கவலையை தெரிவித்துக்கொள்கிறோம் என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
Post a Comment