கட்சியின் பிரதான பதவிகளில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் மற்றும் கபீர் ஹஷீம் நியமனம்…!


ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதியவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று(27) நடவடிக்கை எடுத்தார்.

இதன் பிரகாரம், 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் இன்று(27) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டனர்.

Post a Comment

Previous Post Next Post