உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணையில் திருப்தி இல்லை - ஐ.நா...!


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணையில் திருப்தி இல்லை - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தெரிவிப்பு.
 மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணையில் திருப்தி அடைய முடியாதெனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கடமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனரெனவும் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்குள் பிரவேசிக்கும் வேளையில், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகம் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ அதிகாரத்தில் இருப்பவர்கள் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை முழுமையாக பாதுகாக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பலரின் பொருளாதார நிலை தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்றும் 2021 மற்றும் 2023க்கு இடையில் வறுமை விகிதம் இரட்டிப்பாகியுள்ளது என்று தெரிவித்து கல்வி அல்லது ஊட்டச்சத்தை விட அதிகமான குடும்பங்கள் உணவு அல்லது ஆரோக்கியத்தை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறித்த பிறழ்வை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் என்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவியல் விசாரணையில் அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தையே அடைந்துள்ளதாகவும் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post