இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஷா எல்லையில் ஹமாஸ் அமைப்பினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் பணயக்கைதிகள் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகூ தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு முன்னேற்றகரமான பணிகளையும் மேற்கொள்ளவில்லையென ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
டெல் அவிவ் நகரில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமான போதிலும் பொலிசாரின் தடுப்பு அரண்களை அவர்கள் மீறி பயணித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு காஷாவின் ரபாஹ் பகுதியிலுள்ள சுரங்க பாதையொன்றில் குறித்த 6 பேரின் சடலங்களும் நேற்று முன்தினம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment