விஜய்யின் த.வெ.க. மாநாடு - இன்று தேதி அறிவிப்பு...!


தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர்.
இங்கு வருகிற 23-ந்தேதி மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இதனிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பு நேற்று முன்தினம் பதிலளித்தது.

இந்த நிலையில், த.வெ.க. மாநாடு நடைபெறும் தேதியை விஜய் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வில்லிவாக்கத்தில் நடைபெற உள்ளதாகவும், இன்று காலை 11.17 மணிக்கு த.வெ.க. மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post