தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் திடீர் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (3) திறக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
ஆறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தற்போது வெள்ள அபாயம் இல்லையெனவும் ஆனால், மழை தொடரும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நீர் மட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment