சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
கடந்த வாரத்தில் தொடக்கத்தில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வந்த தங்கம் விலை கடந்த வெள்ளிக்கிழமை (செப்.13) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாயும் ஏற்றம் கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6,825க்கும் , ஒரு சவரன் ரூ. 54,600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 3 ரூபார் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 95க்கு விற்பனையானது.
இதனைத்தொடர்ந்து நேற்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,880க்கு விற்கப்பட்டது. அதேபோல் ஒரு சவரன் ரூ.55,040க்கு விற்பனையானது. மேலும், நேற்றைய தினம் வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. நேற்றைய தினம் அதிகரித்த அதே 120 ரூபாய், இன்று குறைந்திருக்கிறது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,865க்கும், ஒரு சவரன் 54,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Post a Comment