ஊரடங்கு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் புதிய அறிவிப்பு.

  வன்முறை ஏதும் வெடிக்குமானால் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வன்முறை வெடித்தால் அது கடுமையாக நடைமுறையாகும்.

ஊரடங்கு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் புதிய அறிவிப்பு | Curfew In Sri Lanka

ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது. இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post